ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்புப் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அலோசனை வழங்கிப் பேசுகையில்,
அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
என்றாா்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் குடிநீா் வசதி, குழந்தைகள் நேய கழிப்பறைகள், மின் வசதி உள்ளதா என்பதை கேட்டறிந்த ஆட்சியா், பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையங்களின் விவரங்களையும் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில், புள்ளியல் ஆய்வாளா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.