தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,131 புள்ளிகள் உயர்வு!
மும்பை: நேற்றைய ஏற்றத்தை நீட்டிக்கும் விதமாக, மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,215.81 புள்ளிகள் உயர்ந்து 75,385.76 புள்ளிகள் இருந்தது.
வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,131 புள்ளிகள் உயர்ந்து 75,301.26 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 325.55 புள்ளிகள் உயர்ந்து 22,834.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் பேக்கில் சோமேட்டோ 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
இருப்பினும் பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
ஆட்டோமொபைல், கேப்பிட்டல் குட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல், பவர், ரியாலிட்டி மற்றும் மீடியா குறியீடு 2 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஜெர்மனியின் அலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 26 சதவிகித பங்குகளை வாங்க நிதி சேவை நிறுவனம் பங்கு கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதையடுத்து பஜாஜ் ஃபின்சர்வின் பங்குகள் 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.
சாதகமான உலகளாவிய போக்குகள் மற்றும் உள்நாட்டில் சில மற்றும் பல காரணங்களால் உந்தப்பட்டு வலுவான மீட்சியைக் கண்டது. அதே வேளையில், அமெரிக்க மற்றும் சீனாவின் மேம்பட்ட சில்லறை விற்பனை தரவு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது, மிட் கேப் பங்குகள் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. இன்றைய வர்த்தகத்தில், அனைத்து முக்கிய துறைகளும் லாபத்தை பதிவு செய்தன.
டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவு மற்றும் சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் உள்நாட்டு வருவாயில் எதிர்பார்க்கப்படும் மீட்சி ஆகியவற்றால் சென்செக்ஸ் உயர்ந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், அதிக வட்டி விகிதங்கள், சீன பங்குச் சந்தைகளின் முறையீடு, அந்நிய நிதி தொடர்ந்து வெளியேற்றம் மற்றும் நிச்சயமற்ற கட்டண தன்மை ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர்.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று லாபத்துடன் வர்த்தகமான நிலையில், ஆசிய சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிந்தது.
ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ், ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி, பாலாஜி அமின்ஸ், மஹிந்திரா லைஃப், இகேஐ எனர்ஜி, ஜென்சோல் இன்ஜினியரிங், சாதனா நைட்ரோகெம், என்ஐபிஇ, சிர்கா பெயிண்ட்ஸ், வெரிடாஸ், ஜிவிகே பவர், எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ், ஆண்ட்ரூ யூல், எஸ்ஐஎஸ் உள்ளிட்ட 290 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார குறைந்த விலையைத் தொட்டன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.48 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.12 டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.4,488.45 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.6,000.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 341.04 புள்ளிகள் உயர்ந்து 74,169.95 ஆக நிலைபெற்றது. இது அதன் ஐந்து நாள் இழப்பு ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதே வேளையில், நிஃப்டி 111.55 புள்ளிகள் உயர்ந்து 22,508.75 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: நிஸான் மோட்டாா் விற்பனை 45% அதிகரிப்பு