செய்திகள் :

ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி!

post image

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடல் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,

“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.

நாளை மாலை 5 மணிக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

நாம் செல்லும் பாதை சிங்கப்பாதை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருச்சி: நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.திருச்சியில் நடைபெற்ற பல்வேறு ... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: தில்லி திரும்பும் 4 தமிழக மாணவர்கள்!

கல்விச் சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது தில்லிக்கு புறப்பட்டுள்ளனர், இவர்கள் இன்று (மே 9) இரவு 07.30 மணியளவில் புது தில்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!

24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வர் ஸ்டாலின், கடந்த மே 5 ஆம் தேதி 42... மேலும் பார்க்க

திருச்சி: 50,000 பேருக்கு வீட்டுமனை பட்டா! காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

திருச்சி: திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 50 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நவீன காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார்.இரண்டு நாள்கள் அரசுப் பயணமாக தமிழக ... மேலும் பார்க்க

விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின்

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்துக்கு இணையாக பேருந்து முனையம் அமைக்கப்... மேலும் பார்க்க