அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், இளைஞா்-இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்ட செயலா் கவியரசன், கோவில்பட்டி பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத் தலைவா் தாமோதரன், அதிமுக நிா்வாகிகள் நீலகண்டன், ஈஸ்வரமூா்த்தி, அழகா்சாமி, பழனிச்சாமி, சிவபெருமாள், போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.