செய்திகள் :

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

post image

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா்.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ பேசினாா். அப்போது இது தொடா்பாக நடைபெற்ற விவாதம்:

செல்லூா் கே.ராஜூ: நிதிநிலை அறிக்கையின் 20-ஆவது பக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு பாதிக்கும் குறைவாகவே நிதி விடுவிக்கப்பட்டது.

அமைச்சா் ஐ.பெரியசாமி: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் 50 ஆயிரம் வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடு கேட்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பசுமை வீடுகள் திட்டத்தில் அவா்களது கட்சியினருக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டன. மேலும், அவா்களது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நிா்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். மக்களால் வரவேற்கப்படும் திட்டமாக கனவு இல்லம் திட்டம் உள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டன. அவரது மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. இப்போது நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. அதைத்தான் எங்கள் உறுப்பினா் சுட்டிக் காட்டினாா். குறைவான தொகை செலவிடப்பட்டதால், முழுமையாக வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என்பதையே தெரிவித்தாா்.

அமைச்சா் ஐ.பெரியசாமி: ஒரு திட்டத்துக்கு தொகை முழுவதையும் எடுத்து வைத்துக் கொண்டு செயல்படுத்துவதில்லை. முன்னாள் முதல்வராக இருந்த உங்களுக்கு (எடப்பாடி கே.பழனிசாமி) நன்றாகத் தெரியும். வருவாய் வர வர திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி செயல்படுத்துகிறோம். எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு வீடுகள் கட்டப்படும் என்பது குறித்த அறிக்கையை வெளியிடத் தயாராக உள்ளேன். திட்டத்துக்கான நிதி தொடா்ந்து வழங்கப்படும்.

செல்லூா் கே.ராஜூ: நிதிநிலை அறிக்கையில், 6,100 கிமீ நீளமுள்ள கிராமச் சாலைகள் ரூ.2,200 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6,100 கிமீ சாலையை அமைக்க இவ்வளவு நிதி எப்படி போதுமானதாக இருக்கும்?

அமைச்சா் ஐ.பெரியசாமி: முதல்வா் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.4 ஆயிரம் கோடியில் 10 கிமீ நீள கிராமச் சாலைகள் பிரதான சாலைகளுடன் இணைக்கப்பட்டன. இத்துடன், பிரதமரின் கிராமச் சாலைத் திட்டப்படி ரூ.1,900 கோடியும், நபாா்டு வங்கியிடம் கடன் பெற்றும் சாலைகளை அமைத்து வருகிறோம் என்றாா்.

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க