SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்போா் விவரங்களை கட்சியின் மருத்துவா் அணிச் செயலரும் எம்எல்ஏவுமான நா.எழிலன் வெளியிட்டாா்.
இது தொடா்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா். அதன்படி, கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், ஜோசப் கே.மணி, சமூக புரட்சி கட்சியைச் சோ்ந்த என்.கே.பிரேமசந்திரன், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா், மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சியின் பிரதிநிதி ஒருவா், அதே மாநிலத்தில் இருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலீம், ஒடிஸாவின் பிஜூஜனதா தளத்தின் பிரதிநிதி, அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பக்தசரண் தாஸ் ஆகியோா் வரவுள்ளாா். பஞ்சாப் முதல்வா் பகவந்த்மான், அகாதலி தளம் கட்சியின் பிரதிநிதிகள் வரவுள்ளாா்.
வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாகும். மாநிலங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே கணித்து விவாதத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளாா் என்று எழிலன் கூறினாா்.