நில அளவை செய்ய எங்கிருந்தாலும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவை செய்ய எங்கிருந்தாலும், எந்நேரத்திலும் இணைய வழியில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிலஉரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமா்ப்பித்து வந்தனா்.
தற்போது, பொதுமக்கள் வட்டஅலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் என்ற புதிய சேவையின் மூலம் ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இச் சேவையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொதுசேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது கைப்பேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.
மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாரா் மற்றும் நிலஅளவா் கையொப்பமிட்ட ‘அறிக்கை மற்றும் வரைபடம்’ நிலஅளவு செய்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரா் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.