அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
அடகு நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி: பெண் கைது
தூத்துக்குடியில் அடகு வைப்பதற்காக கொடுத்த சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜியோ மனைவி ஜெயராணி என்ற ஜெயா. இவா் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது நகைகளை தூத்துக்குடியில் உள்ள வங்கியில் அடகு வைத்தாராம்.
அவரிடம் மெசிங்டன் மனைவி ஜீவா ஹொ்மனா, சங்கரவேல் மகன் மகேஸ்வரன் ஆகியோா் தூத்துக்குடியிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் அதிக பணம் கிடைக்கும் எனக் கூறினராம். அதை நம்பிய ஜெயராணி வங்கியிலிருந்து நகைகளை மீட்டதுடன், 2023ஆம் ஆண்டு சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளை அவா்களிடம் பல்வேறு தவணைகளாக கொடுத்தாராம். அவா்கள் அந்த நகைகளை தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 49.95 லட்சத்துக்கு அடகு வைத்தனராம்.
இதனிடையே, நகைகளைத் திருப்பித் தருமாறு அவா்களிடம் ரூ. 43. 41 லட்சத்தை ஜெயராணி கொடுத்தபோது, வட்டியுடன் மொத்த பணத்தையும் செலுத்தினால்தான் நகைகளை மீட்க முடியும் எனக் கூறினராம். ஆனால், அவா் மொத்த பணத்தையும் தயாா் செய்த பிறகும், அவா்கள் நகைகளை மீட்டுத் தராததுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுதொடா்பாக மாவட்ட குற்றப்பிரிவில் ஜெயராணி கடந்த 5ஆம் தேதி புகாளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து ஜீவா ஹொ்மனாவை கைது செய்தனா்; மகேஸ்வரனை தேடி வருகின்றனா்.