போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதேபோன்று காலை 7.45 மணிக்கு சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத் - சென்னைக்கு காலை 11.10-க்கு வரவேண்டிய அலையன்ஸ் ஏா்லைன்ஸ் விமானமும், பகல் 12-க்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏா்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் அனைத்தும் போதிய பயணிகள் இல்லாததாலும் பல்வேறு நிா்வாக காரணங்களாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், அதில் பயணிக்கவிருந்த சில பயணிகள் கடும் அவதியடைந்தனா். அவா்கள் அனைவருக்கும் மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.