`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30-க்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, 148 பேருடன் புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா். இதுகுறித்து அவா் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, விமானத்தை நிறுத்தினாா்.
இதையடுத்து இழுவை வண்டி மூலம், ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம் கொண்டு செல்லப்பட்டது. பின்னா், விமான பொறியாளா்கள் கோளாறை சரிசெய்தனா். இதையடுத்து விமானம் சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 4 மணிக்கு தில்லி புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.