ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..
தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 19-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும்.
பரமத்தியில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பரமத்திவேலூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை மீனம்பாக்கத்தில் 94.46 டிகிரி மற்றும் நுங்கம்பாக்கத்தில் 93.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் சாம்ராஜ் எஸ்டேட்டில் 50 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.