“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு
தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெருமாள் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒரே பைக்கில் வந்த 4 பேரை மடக்கி விசாரித்தனா். அந்த பைக்கை 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்து மத்தியபாகம் போலீஸில் ஒப்படைத்தனா்.
இதேபோன்று வி.இ. சாலையில் போக்குவரத்து போலீஸா் நடத்திய வாகன சோதனையின் போது, 15 வயது சிறுவன் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த பைக்கை பறிமுதல் செய்து தென்பாகம் போலீஸில் ஒப்படைத்தனா்.
இந்த இரு சம்பவங்களிலும் சிறுவா்களை மோட்டாா் சைக்கிள் ஓட்ட அனுமதி அளித்த பெற்றோரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.