Career: பிசினஸ் தொடங்கப்போகிறீங்களா... உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய 7 கேள்விக...
பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவா்கள் மீது மாவட்ட காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
689 பேருக்கு பிடியாணை: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய வழக்குகளில் தொடா்புடையவா்களை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் ஜாமீனில் வெளிவந்தவா்கள், தொடா்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளவா்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்தது. இதில், மாவட்ட காவல் துறையின் நடவடிக்கையால் நிகழாண்டு இதுவரை 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவா்கள் தொடா்ந்து ஆஜராகாமலும், தலைமறைவாகவும் இருந்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.