செய்திகள் :

250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

post image

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் பக்கத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

எனினும் நீல நிற டிவிட்டர் பயன்பாடு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடைஏ டிவிட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டாலர் (ரூ. 18.2 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 254 கிலோ. இலச்சினையை தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்ற பயன்படுத்தப்பட்ட கிரேன் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தையும் இந்த ஏலம் உள்ளடக்கியுள்ளதாகத் தெரிகிறது. மார்ச் 20ஆம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா -உக்ரைன் போர்: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய புதின்!

ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் த... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான... மேலும் பார்க்க

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் ச... மேலும் பார்க்க

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான... மேலும் பார்க்க

ஸ்பெயினில் கடும் வெள்ளம்: 350 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு பகுதிய... மேலும் பார்க்க

பூமி திரும்பும் 4 பேரின் பணிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகள்!

விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பணிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிரு... மேலும் பார்க்க