Sunita Williams: பூமிக்கு திரும்பிய வீரர்களை வரவேற்ற திமிங்கலங்கள்!; இணையத்தில் ...
பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் திங்கள்கிழமை கலந்துகொண்ட வைகோ, மணிப்பூர் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வைகோ பேசியதாவது:
“மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை, கொலை என அனைத்து அரங்கேறி வருகின்றன. இதுகுறித்த முக்கிய விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
ஒரு மில்லியன் டாலர் கேள்வியை கேட்க விரும்புகிறேன். 140 கோடி மக்களின் பாதுகாவலரான பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எப்போது கேட்டாலும் ஏதோவொரு நாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் ஏன் இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை?
பிரதமராக அவரது கடமையில் இருந்து தவறி இருக்கிறார். மணிப்பூர் இந்தியாவில் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
வைகோவின் பேச்சை குறிக்கிட்டுப் பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர், அரசியலமைப்பு பதவியில் இருக்கும் மோடி குறித்த விமர்சிப்பது அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தெரிவித்தார்.
ஆளுங்கட்சி எம்பிக்களின் அமளிக்கும் மத்தியில் உரையாற்றிய வைகோ, நான் என்ன தவறான வார்த்தையை பயன்படுத்தினேன் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, ’பிஎம் என்றால் பிரைம் மினிஸ்டர்’, ஆனால் நமது பிரதமரை பொறுத்தவரை ’பிக்னிக் மினிஸ்டர்’ என்று வைகோ தெரிவித்ததற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, பிரதமரை விமர்சிக்க நீங்கள் யார்? என்று பாஜகவினர் கோஷமிட்ட நிலையில், ‘நான் வைகோ, அண்ணாவின் பின்பற்றி வந்தவன்’ என பதிலளித்தார்.