செய்திகள் :

கோவை: திருமணம் கடந்த உறவில் பிறந்த ஒரு மாத குழந்தை சந்தேக மரணம் - உடலை தோண்டி பிரேத பரிசோதனை

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு இடையே உள்ள திருமணம் தாண்டிய உறவில் அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனை

கடந்த மாதம் அந்தப் பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் கடந்த உறவில் பிறந்த குழந்தை என்பதால், திருப்பத்தூரில் உள்ள ஒரு தம்பதிக்கு குழந்தையை சட்ட விரோதமாக விற்றுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்துள்ளது. அவர்கள் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்

குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் உடல்நலம் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தைகள் நல ஆணையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு  அறிவுறுத்தல்படி குழந்தையின் உடல் பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக காவல்துறை

தாமதமாக தகவல் அறிந்த காவல்துறையினர் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு, இஎஸ்ஐ மருத்துவர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக காவல்துறையிடம் கேட்டபோது, “குழந்தை மார்ச் 12-ம் தேதி உயிரிழந்துள்ளது. மார்ச் 13-ம் தேதி குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். எங்களுக்கு மார்ச் 15-ம் தேதி தான் தகவல் தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்து நேற்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளோம். இதன் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.

கைது

சட்டவிரோதமாக குழந்தையை தத்தெடுத்த இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ‘சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்யப்பட்டால்  உடனடியாக காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும்.’ என்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பவண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

நெல்லை: `என்னை எப்படியும் கொன்னுடுவாங்க'- கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ-யின் கண்ணீர் வீடியோ

நெல்லை டவுன், தைக்கா தெருவில் வசித்து வந்தவர் ஜாகிர் உசேன் என்கிற பிஜிலி (60). விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர், டவுன் ஜாமியா தைக்கா தெருவில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக பைக்கில்... மேலும் பார்க்க

"பாதி விலைக்கு ஸ்கூட்டர்; 48,384 பேரிடம் ரூ.231 கோடி மோசடி" - சட்டசபையில் கேரள முதல்வர்

கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (27). இவர் ‘ஸீட் சொசைட்டி’ என்ற பெயரில் பாதி விலைக்கு ஸ்கூட்டர், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள், விவசாய உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி பொது... மேலும் பார்க்க

சிவகாசி: ஜாமீனில் வந்தவர் வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை; பழிக்குப்பழி சம்பவத்தில் 3 பேர் கைது

சிவகாசி அருகே பழிக்குப்பழியாக வீடு புகுந்து கூலித் தொழிலாளியை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போத... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழாவுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்கள்... படகுடன் சிறைபிடிப்பு..!

கடந்த 14,15 ஆகிய இரு நாள்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. இதில் 3140 இந்திய பக்தர்கள் பங்கேற்றனர். கச்சத்தீவு திருவிழாவினை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடி... மேலும் பார்க்க

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க