செய்திகள் :

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

post image

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

நன்றாகப் படித்து வேலையிலிருக்கும் நபர்கள் கூட இது போன்ற ஒரு மோசடியில் பணத்தை இழந்து விடுகின்றனர். எனவேதான் இப்போது மொபைல் போனில் மத்திய அரசு இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் மோசடிகள் குறையவில்லை. மும்பை அந்தேரியைச் சேர்ந்த 49 வயது பெண்ணிற்குக் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மர்ம போன் அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர், "உங்களது போனில் இருந்து பலருக்கு மிரட்டல் மற்றும் மோசடி தொடர்பான மெசேஜ் அனுப்பப்பட்டு இருப்பதால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும்" என்று தெரிவித்தார். அந்த நபரில் குற்றச்சாட்டை அப்பெண் மறுத்தார். அடுத்து சுனில் குமார் என்பவர் அப்பெண்ணிற்கு போன் செய்து, தான் டெல்லி சைபர் பிரிவு போலீஸிலிருந்து பேசுவதாகவும், உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதோடு உங்களது ஆதார் கார்டை பயன்படுத்திப் பல வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு பணமோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். ராஜேஷ்வர் பிரதான் என்று சொல்லிக்கொண்டு மற்றொருவர் போலீஸ் சீருடையில் வீடியோ காலில் வந்தார். அவரை மும்பை பெண் போலீஸ் என நம்பிவிட்டார் அப்பெண். வீடியோ காலில் வந்த நபர் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்திப் பணமோசடி செய்யப்பட்டு இருப்பதால் உங்களை 90 நாட்கள் கைது செய்து காவலில் வைக்கப்போவதாகத் தெரிவித்தார்.

போலீஸ் காவலில் இருக்கவில்லையெனில் 7 நாட்கள் டிஜிட்டல் கைதில் இருக்கலாம் என்றும், அதற்கு நீங்கள் கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த நபர் தெரிவித்தார். உடனே அப்பெண்ணும் டிஜிட்டல் கைதில் இருப்பதாகக் கூறி கடிதம் எழுதிக் கொடுத்தார். அக்கடிதத்திற்கு மோசடி கும்பல் ஒப்புதல் கொடுத்திருப்பதாக அப்பெண்ணிற்குக் கடிதம் அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து அப்பெண் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட்டார். அதோடு விசாரணை முடியும் வரை அவரது வங்கிக்கணக்கிலிருக்கும் பணம் முழுவதையும் தாங்கள் சொல்லும் சிறப்புக் கணக்கிற்கு மாற்றும்படி விசாரணை முடிந்த பிறகுப் பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுவோம் என்றும் கூறினர். மேலும், வழக்கு இப்போது சி.பி.ஐ வசம் இருப்பதாக மர்ம நபர் தெரிவித்தார். அப்பெண்ணும் தனது சேமிப்புப் பணம் 33.5 லட்சத்தை அனுப்பினார்.

சித்தரிப்பு படம்

பணம் கைக்கு வந்தவுடன் மர்ம நபர் தொலைப்பேசியைத் துண்டித்துவிட்டார். போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை. அதன் பிறகே அப்பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருப்பப்பட்டு டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பங்குச்சந்தை மோசடியில் ரூ.1.4 கோடி அபேஸ்

மும்பையில் 63 வயது பைலட்டிடம் பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, மோசடி கும்பல் ரூ.1.4 கோடியை மோசடி செய்துள்ளது. விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகுத் தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வரும் 63 வயது பைலட் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார். அவருக்கு ஆன்லைனில் கிடைத்த ஒரு நம்பரை பைலட் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகம் பற்றிப் பேசினார்.

ஹாரி சிங் மற்றும் அருண் ஆகியோர் பங்கு வர்த்தகம் தொடர்பாக சில டிப்ஸ் கொடுத்தனர். அது சரியாக இருந்தது. அதோடு அவர்கள் இருவரும் தங்களது கம்பெனி மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வர்த்தகம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

Digital Arrest

அதன் படி பைலட்டும் அந்த மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் பணம் முதலீடு செய்து வர்த்தகம் செய்தார். 9 வங்கிக்கணக்கில் ரூ.1.4 கோடியை இதற்காக பைலட் அனுப்பி வைத்தார். அவர் முதலீடு செய்த பணத்திற்கு 8 கோடி அளவுக்கு லாபம் காட்டியது. உடனே பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இருவரிடம் இது தொடர்பாக பைலட் பேசியபோது அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் எடுக்க உதவவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இதற்காகப் பயன்படுத்தி வந்த வாட்ஸ் ஆப்பை மூடிவிட்டனர். இதையடுத்து பைலட் போலீஸில் புகார் செய்துள்ளார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31)... மேலும் பார்க்க

`ஆடு ஜீவிதம்' போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் - 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்

`ஆடு ஜீவிதம்' படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க