செய்திகள் :

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

post image

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவில் குடும்ப நலக் கோர்ட்டில் உள்ளது. அவரது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தன் தாயைக் கவனித்துக்கொள்வதற்காக  இரண்டாவது  திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது சுய விபரங்களைப் பதிவு செய்திருந்தார். அவரது மொபைல் எண்ணுக்கு மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் தொடர்பு கொண்டு, அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறினார். மேலும், குடும்பத்துடன் அவரை நேரில் பார்ப்பதற்காக வருவதாகவும் முருகேஸ்வரி கூறியுள்ளார். அதன்படி முருகேஸ்வரி உள்ளிட்ட மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் காரவிளையில் உள்ள எல்.ஐ.சி ஏஜென்ட்டின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

எல்.ஐ சி முகவரை திருமணம் செய்வதாக அவரது வீட்டில் திருடிய பெண்கள்

எல்.ஐ.சி ஏஜென்ட் அந்த நான்கு பெண்களையும் வரவேற்றுப் பேசியிருக்கிறார். அப்போது திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த தங்க வளையல், மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் அந்தப் பெண்களிடம் காண்பித்துவிட்டு மேஜை டிராயரில் வைத்தார். நான்கு பெண்களும் எல்.ஐ.சி ஏஜென்ட்டின் வீட்டில் சிறிதுநேரம் இருந்து பேசிவிட்டுச் சென்றனர். சில நாட்களுக்குப்பிறகு மேஜை டிராயரில் இருந்த நகைகளைப் பார்த்தபோதுதான், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீடுமுழுவதும் நகையைத்தேடியும் கிடைக்காததால் திருமணம் செய்வதாக வீட்டுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நான்கு பெண்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.

திருமண வரன் பார்க்க வந்த முருகேஸ்வரியைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மற்றொரு பெண்ணின் எண்ணில் தொடர்புகொண்டு பேசியபோது அவரைத் திருமணம் செய்ய முருகேஸ்வரிக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நகை குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட பெண்கள்

இதையடுத்து 8 சவரன் நகை திருடுபோனதாக எல்.ஐ.சி ஏஜென்ட் ராஜாக்கமங்கலம்  போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது நகையைத் திருடி சென்றது மதுரை கும்பல்தான் என்பது தெரியவந்தது. போலீசார் மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இவர்கள் திருமணம் செய்வதாக வேறு யாரையாவது ஏமாற்றி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31)... மேலும் பார்க்க

`ஆடு ஜீவிதம்' போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் - 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்

`ஆடு ஜீவிதம்' படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க