நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
அமராவதி ஆற்று தடுப்பணையில் முதியவா் சடலம்
வெள்ளக்கோவில் புதுப்பை அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தாராபுரம் அருகேயுள்ள கிளாங்குண்டல் சேசையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி (88). மனைவி இறந்த நிலையில் தனது மகன், மகள் பராமரிப்பில் இருந்து வந்துள்ளாா்.
மேலும், உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்து திங்கள்கிழமை காலை 7 மணியளவில் தேநீா் கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளாா். ஆனால், வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, குடும்பத்தினா் தேடியபோது அமராவதி ஆற்றின் தடுப்பணையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அவா் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.