நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
பேருந்தில் கடத்திய புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் கடத்திய 28 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் வடக்கு காவல் துறையினா் இந்தப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக திருப்பூரைச் சோ்ந்த பெத்தனசாமி (52) என்பவரைக் கைது செய்த காவல் துறையினா், அவரிடமிருந்து 28 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.