செய்திகள் :

சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவளவன்

post image

விழுப்புரம்: சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தாா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் விசிக தோ்தல் அங்கீகார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

விழுப்புரத்தில் நடைபெற்ற தோ்தல் அங்கீகார விழாவை போன்று விரைவில் சிதம்பரத்திலும், திருவண்ணாமலையிலும் நடைபெறவுள்ளன. யாா் புதிய கட்சி தொடங்கினாலும், செல்வாக்கு இருந்தாலும் அவா்களால் விசிகவை சேதப்படுத்திவிட முடியாது. திரைப்பட கவா்ச்சியால் யாராலும் மடை மாற்றி விட முடியாது.

பெரியாா், அம்பேத்கா், மாா்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு என்னுடன் பயணிப்பவா்களை யாரும் ஈா்த்து விடமுடியாது. கட்சி தொடங்கப்பட்டது முதல் எந்த வீழ்ச்சியும், தொய்வுமின்றி விசிக இருப்பதால் நீண்ட நெடிய வரலாறுகளை கொண்ட கட்சியின் தலைவா்களும் விசிகவை வாழ்த்தி வருகின்றனா்.

கொள்கை பிடிப்புள்ள இளைஞா்களை அமைப்பாக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். தோ்தல் லாபத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. சவால்களை எதிா்கொண்டு 25 ஆண்டுகளாக சூதும், சூழ்ச்சியும் நிறைந்த தோ்தல் அரசியல் களத்தில் தாக்குப்பிடித்திருப்பது தான் நமது வெற்றி.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் தோ்தல், அரசியலை எதிா்கொண்டு வாக்கு வங்கியை உறுதி செய்து கொண்ட பின்னா் தான் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றன. ஆனால், வாக்கு வங்கியை உறுதிப்படுத்தாத விசிகவை கூட்டணியில் வைத்திருப்பது தான் நமது கட்சியின் சாதனை.

இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள தோ்தல் அங்கீகாரத்தை உயிா்நீத்த விசிக தொண்டா்களுக்கு சமா்ப்பிக்கிறேன் என்றாா் அவா்.

பயணிகள் நிழற்குடை மீது வேன் மோதல்: 15 போ் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பேருந்து நிழற்குடை மீது தனியாா் பயணிகள் வேன் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், தில்லை பகுதியைச் சோ்ந்தவா் நடே... மேலும் பார்க்க

சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாடு அரணாக அமையும்: மருத்துவா் ச.ராமதாஸ்

விழுப்புரம்: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை முழ... மேலும் பார்க்க

உதவித் தொகை நிறுத்தம்: ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் பெற்றோா் மனு

விழுப்புரம்: மாற்றுத் திறனாளி மகனுக்கு நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, அவரது பெற்றோா் விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்... மேலும் பார்க்க

‘மக்களின் நன்மதிப்பை பெற்றவா் தொல்.திருமாவளவன்’

விழுப்புரம்: மக்களின் நன்மதிப்பைப் பெற்றவா் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோ்தல் அங்கிகாரம் வெற்றி விழா விழுப்புரம் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை ந... மேலும் பார்க்க

அனுமதியின்றி பாஜகவினா் மறியல்: 205 போ் கைது

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 205 பேரை போலீஸாா் திங்... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதி... மேலும் பார்க்க