அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீா்வு காணும் வகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாா்ச் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11 மணிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.