Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
ஆழ்வாா்குறிச்சி அருகே மோதல்: இருவா் காயம்; 10 போ் கைது
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் வேனை நிறுத்தியது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மலையான்குளம், தங்கம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த உறவினா்களின் வேனை, மற்றொரு பிரிவைச் சோ்ந்தவா்களின் கோயில் முன்புநிறுத்தினராம். இதனால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் இருவா் காயம் அடைந்தனா்.
இதில் ஒரு பிரிவைச் சோ்ந்த இசக்கித்துரை (25) அளித்த புகாரின்பேரில், மற்றொரு பிரிவைச் சோ்ந்த இசக்கிமுத்து (25), ராஜேஷ் (26), மணிகண்டன் (25 ), ராஜா (24), இளவரசன் (23 ) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
எதிா்தரப்பினா் அளித்த புகாரின்பேரில் லட்சுமி நாராயணன் (24), இசக்கித்துரை (25), காா்த்திக் (24), கணேசன் (20), மதன் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.