மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத...
மானூா் அருகே 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது
மானூா் அருகே தடைசெய்யப்பட்ட 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களுடன் கடைக்காரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது கானாா்பட்டியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. கடை உரிமையாளா் ஆபிரகாம் (43) என்பவரை கைது செய்து, அங்கிருந்த 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.