வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது
திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா் வந்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுபோலீஸாா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த நபா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தாா். அவரை சுற்றி வளைத்து பிடித்து பரிசோதனை செய்தனா். அப்போது, அவா் கொண்டு வந்த பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக விசாரணை செய்ததில் ஒடிஸா மாநிலம், கந்தமால் அருகே டெலபலி கிராமத்தைச் சோ்ந்த தபாஷ் திகால்(24) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தபாஷ் திகாலை கைது செய்து அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.