சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் ரூ.200 கோடி வசூல்!
மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ200 கோடி வசூலித்துள்ளது.
எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர்.
இதனால், ஏற்பட்ட சர்ச்சைகளால் நடிகர் மோகன்லால் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாகத் தெரிவித்தார்.
சமீபத்தில் எம்புரானில் சர்ச்சையை ஏற்படுத்திய 3 காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் எம்புரான் வரலாறு படைத்தது எனக் கூறியுள்ளார்.