செய்திகள் :

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

post image

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த 15 வயது சிறுமியும், வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளுடைய கிழக்கு ஆசிய மேலாதிக்கவாதி என அறியப்படும் 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை இன்று (ஏப்.2) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுமிதான் சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பெண் மற்றும் 2வது இளம் வயதுடையவர் எனக் கூறப்படுகின்றது.

மேலும், கடந்த 2024 டிசம்பரில் தனது வன்முறையைத் தூண்டும் வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளினால் கைது செய்யப்பட்ட நிக் லீ ஸிங் கியூ (வயது 18) என்பவருடன் இணையவழியில் தொடர்பிலிருந்தவர் என அடையாளம் காணப்பட்டு தற்போது 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு ஆசிய மேலாதிக்கவாதி என அறியப்படும் அந்த சிறுவன் சிங்கப்பூரிலுள்ள மசூதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த சிறுவன் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூரின் மாரோஃப் மசூதியிலிருந்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே சண்முகம் இன்று (ஏப்.2) ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தீவிரவாத மற்றும் பிரிவிணைவாதக் கொள்கைகளுடையவர்கள் பிறரைக் கொலை செய்யக்கூடும் எனவே இதுபோன்ற வழக்குகள் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: திருவிழாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்த... மேலும் பார்க்க