̀̀̀̀̀̀̀̀̀̀̀``இதுதான் சிறந்த வரவேற்பு!" - தனது செல்ல நாய்கள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் நெகிழ்ச்சி
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக (286 நாள்கள்) பயணித்து வரும் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த மார்ச் 19ம் தேதி பூமிக்குத் திரும்பினார். பூமிக்குத் திரும்பிய பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விண்வெளியில் நீண்டகாலம் செலவிட்டது குறித்து அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது இந்தியா குறித்து, "இந்தியா அற்புதமானது. ஒவ்வொரு முறையும் இமய மலைகளுக்கு மேலே செல்லும் போதும் என்னுடன் பயணித்த வில்மோர் சில ரம்யமான புகைப்படங்களை எடுத்தார். புவியின் டெக்டானிக் தட்டுகள் இடித்து அதன் விளைவாக உருவான இமயமலை ஒருபுறம், அங்கிருந்து குஜராத் மும்பை பக்கம் வந்தால் அழகிய கடல் என மிகவும் வண்ணமயமாக தெரிந்தது.
வீடு திரும்பியதும் தான் செய்த முதல் விஷயம் குறித்துப் பேசியவர், "எனது கணவரையும் எனது நாய்களையும் கட்டி அணைத்தேன். வீட்டில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவது உணவு, நான் வீடு திரும்பிய போது என் தந்தை எனக்கு சீஸ் சாண்ட்விட்ச் செய்து கொடுத்தார்" என்றார்.
Best homecoming ever! pic.twitter.com/h1ogPh5WMR
— Sunita Williams (@Astro_Suni) April 1, 2025
இந்நிலையில் வீட்டில் தனது செல்ல நாய்களுடன் கட்டி அணைத்துக் கொஞ்சி விளையாடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொலியை தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, "இதுவரை நான் வீடு திரும்பியதிலேயே சிறந்த வரவேற்பு இதுதான்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
