Sunita Williams: 9 மாதங்கள் விண்வெளி நிலைய வாசம்; ஆனால், இவ்வளவுதான் சம்பளமா?
ஒன்பது மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியாமல்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாமல் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அங்கேயே உள்ளனர். இவர்களை அழைத்து வருவதற்காக செலுத்தப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. இவர்கள் டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 19 ஆம் தேதிக்கு முன்பாக பூமிக்குத் திரும்புவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்குச் சென்றனர். இவர்கள் 10 நாள்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்குத் திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டது. இவர்கள் பூமிக்குத் திரும்ப தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்தது நாசா. இந்நிலையில், இவர்கள் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் மார்ச் 19 ஆம் தேதிக்கு முன்பாக பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பெறப் போகும் சம்பளம் பேசுபொருள் ஆகியுள்ளது. ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் கேடி கோல்மன் என்பவர் தனது விண்வெளி பயணத்தின்போது தனக்குக் கிடைத்த வருவாய் விவரங்களைக் கூறியுள்ளார். அதன்படி நாசா வீரர் ஒருவர் விண்வெளியில் இருக்கும் காலகட்டத்திலும் கூடுதல் நேரம் இருப்பதற்கான சம்பளமோ அல்லது சிறப்புச் சம்பளமோ வழங்கப்படாது என்று கூறியுள்ளார். நாசா வீரர்கள் அனைவரும் பெடரல் ஊழியர்கள் தான்.
என்னென்ன சலுகைகள்?
என்னதான் அவர்கள் விண்வெளியில் இருந்தாலும், அது அவர்கள் பூமியில் வழக்கமாக அலுவலகத்திற்கு சென்று வேலை பார்ப்பது போலவே கருதப்படும். பெடரல் ஊழியர்கள் அலுவல் ரீதியாக வெளியூருக்கு ஒரு டிரிப் சென்றால் என்ன என்ன சலுகைகள் கிடைக்குமோ அது மட்டுமே கிடைக்கும். அவர்கள் தொடர்ந்து தங்கள் வழக்கமான ஊதியத்தை தான் பெறுகிறார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கும் செலவு மற்றும் அவர்களின் உணவு செலவுகளை நாசா பார்த்துக்கொள்ளும். இது மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும் சலுகை.

மேலும் இழப்பீடு தொகை பற்றிக் கூறும் கோல்மன், “அவர்களுக்கு சிறு இழப்பீடு தொகையும் வழங்கப்படும். இது தினசரி உதவித் தொகை போலவே கருதப்படும். அதன்படி ஒரு நாளைக்கு வெறும் $4 (ரூ.347) வழங்கப்படும்.”அவர் 2010-11 காலகட்டத்தில் மொத்தம் 159 நாட்கள் விண்வெளியில் இருந்தார். அப்போது கோல்மனுக்கு மொத்தமாகவே சுமார் $636 (அதாவது ரூ.55,000 மட்டுமே) கூடுதல் ஊதியமாகக் கிடைத்துள்ளது.
அதன்படி பார்த்தோம் என்றால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இப்போது மொத்தம் 287 நாள்களுக்கு மேல் விண்வெளியில் இருக்கிறார்கள். அதன்படி அவர்களுக்குக் கூடுதல் சம்பளமாக தலா $1,148 (சுமார் ரூ.1 லட்சம்) மட்டுமே கிடைக்கும். இது அமெரிக்காவில் மிக மிகக் குறைந்த தொகையாகும்.
சுனிதா வில்லியம்ஸ்க்கு சம்பளம் எவ்வளவு?
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அமெரிக்க பெடரல் ஊழியர்களின் ஊதியத்தில் GS-15 பிரிவில் உள்ளனர். இது அமெரிக்க பெடரல் ஊழியர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச சம்பள ரேங்க் ஆகும். GS-15 பெடரல் ஊழியர்களுக்கு ஒரு ஆண்டிற்கு அடிப்படை சம்பளமாக $125,133 - $162,672 (சுமார் ரூ.1.08 கோடி - ரூ.1.41 கோடி) வரை கிடைக்கும். அதன்படி சுனிதா வில்லியம்ஸும் வில்மோரும் 9 மாதங்கள் விண்வெளி மையத்தில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு $93,850 - $122,004 (சுமார் ரூ.81 லட்சம் - ரூ.1.05 கோடி) வரை வழக்கமான சம்பளம் கிடைக்கும்.
மொத்த சம்பளம் எவ்வளவு?
மேலும் இவர்கள் பெரும் தினசரி சிறப்புத் தொகை $1,148 (சுமார் ரூ.1 லட்சம்) சேரும் என்பதால் இந்த விண்வெளி பயணத்திற்கு அவர்களுக்கு $123,152 (ரூ.1.06 கோடி) சம்பளமாகக் கிடைக்கும். இது பெரிய தொகை போன்று தெரியலாம். ஆனால் அமெரிக்காவில் உள்ள பெரிய பெரிய துறைகளில் பணியாற்றுபவர்களின் சம்பளத்தைவிட இது குறைவுதான். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் உள்ள ஊழியர்கள் பெறும் சம்பளத்தை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks