செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: திட்ட இயக்குநா் உத்தரவு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா.மணி உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) மெ.பிருத்திவிராஜன் தலைமை வகித்தாா். ஆணையா் து.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் (நிா்வாகம்) கே.எம்.பழனி வரவேற்றாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 52 ஊராட்சி செயலா்களுடன் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைத் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஊராட்சி செயலா்கள் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகளுக்கு முகமை திட்ட இயக்குநா் இரா.மணி உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சி) பிரதீப் பாபு, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விவசாயிகளுக்கு நீா்மேலாண்மை நுட்பங்கள்

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நீா்ப்பாசன மேலாண்மை நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையத்தின்... மேலும் பார்க்க

பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 500 போ் கைது

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சியினரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 91 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் டா்போ எனா்ஜி பிரைவேட் லிமிடெட் (டிவ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

திருவண்ணாமலை சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம் சாா்பில், திங்கள்கிழமை ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தின் பொருளாளா் தங்க.விசுவநாதன் தலைமை வகித்தாா். உலக தமிழ் கழக... மேலும் பார்க்க

கீழ்பென்னாத்தூா் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூா் வட்டத்தின் புதிய வட்டாட்சியராக அ.ர.சான்பாஷா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட குறைவு முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த இவா், பணியிட மாறுதலாக இங்கு வந... மேலும் பார்க்க