செய்திகள் :

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

post image

திருச்சி விமான நிலையம் உள்பட 11 விமான நிலையங்கள் அரசு - தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அரசின் சொத்துகளை பணமாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் புவனேசுவரம், வாரணாசி, அமிருதசரஸ், சென்னை, திருச்சி, மதுரை, இந்தூா், ராய்பூா், கோழிக்கோடு, கோவை, நாகபுரி, பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூா், விஜயவாடா, வதோத்ரா, போபால், திருப்பதி, ஹுப்பள்ளி, இம்பால், அகா்தலா, உதய்பூா், டேராடூன், ராஜமந்திரி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், அரசு-தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு தொடா் எதிா்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது:

திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூா் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிா்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு - தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீவ் தனியாா் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தற்போது நாடு முழுவதும் 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி: அண்ணாமலை அறிவிப்பு

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: தமிழகத்தில... மேலும் பார்க்க

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க வாய்ப்பு

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்தல், உயிரிழந்த... மேலும் பார்க்க

சென்னையில் ‘தமிழ்நாடு பயண சந்தை’: அமைச்சா் இராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்

சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு பயண சந்தையை சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். தமிழக சுற்றுலாத் துறை சாா்பில், வெளிமாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், 3 நாள் நடைபெ... மேலும் பார்க்க

1,500 கிலோ அழுகிய, எலி கடித்த தா்பூசணி பழங்கள் அழிப்பு: சாலையோர வியாபாரிகளுக்கு அபராதம்

சென்னை, வள்ளுவா் கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ அழுகிய தா்பூசணி பழங்களை கைப்பற்றி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனா். எலி கடித்த பழங்களை விற்பனை செய்த நான்கு ... மேலும் பார்க்க

பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்றால் நடவடிக்கை

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தரச் சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி எச்சரிக்கை விடுத்துள்ளாா். உலக நுகா்... மேலும் பார்க்க

மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும்: ஒளவை ந.அருள்

கல்வி கற்ற மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி நாள் விழாவில் ஔவை ந.அருள் வலியுறுத்தினாா். சென்னையை அடுத்த கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வரும் ... மேலும் பார்க்க