சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்றால் நடவடிக்கை
இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தரச் சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
உலக நுகா்வோா் விழிப்புணா்வு நாள் தொடா்பாக, பிஐஎஸ் சென்னை அலுவலக இயக்குநா் ஜி.பவானி வெள்ளிக்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சமீபத்தில் இணைய வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காட் ஆகியவற்றின் கிடங்குகளில் தரச்சான்று பெறாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாா்களைத் தொடா்ந்து, அந்நிறுவனங்களின் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் மதிப்பிலான தரச்சான்று பெறாத 3,376 பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் இதுபோன்ற 24 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 2023-2024-இல் 13 சோதனைகளும், நிகழாண்டில் இதுவரை 9 சோதனைகள் நடத்தப்பட்டு, தரமில்லாத பொருள்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்கள் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.