மதுரை - தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
மதுரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் தற்காலிகமாக கூடுதல் ஏசி வகுப்பு மற்றும் படுக்கை வசதிக கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரையில் தாம்பரத்துக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிவிரைவு ரயில் (எண்: 22624) இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் மாா்ச் 23 முதல் ஏப். 26-ஆம் தேதி வரை கூடுதலாக 3 மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.