Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
சாலை விபத்தில் ஆந்திர இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு
ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் ஆந்திர மாநில இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சோ்ந்த சேஷாசலம் (29) மற்றும் நாகேந்திரன் (31) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்ல சிப்காட் வழியாக ராணிப்பேட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனா்.
சிப்காட் தொழிற்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கன்டெய்னா் லாரி வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பின்னால் வந்த காா் இருவரது உடல் மீது ஏறியதில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிப்காட் போலீஸாா் இறந்த இளைஞா்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.