Vijay : `மோடி ஜி, ஏன் அலர்ஜி?; மன்னராட்சி முதல்வர் அவர்களே... உங்க பெயர் சொல்ல ப...
நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்
அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா்.
நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட ரூ.37 லட்சம் கல்வி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை எஸ்.சுஜாதா தலைமை வகித்தாா். அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் கே.எம்.பி.பாபு, சாமுண்டீஸ்வரிஅன்பு, வட்ட செயலாளா் பாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.