பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி; சிகிச்சையில் தாய்! என்ன நடந்தது?
ஹைதராபாத் அருகே தயிர் சாதம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகளின் தாயும் ஆசிரியருமான லாவண்யா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் பகுதியில் பள்ளி ஆசிரியர் லாவண்யா (வயது 35) மற்றும் அவரது மூன்று குழந்தைகள் வியாழக்கிழமை இரவு தயிர் சாதம் சாப்பிட்டுள்ளனர். அவரது கணவர் சென்னையா மட்டும் வேறு உணவு சாப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் லாவண்யாவுக்கு கடுமையான வயிற்று வலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லாவண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார் சென்னையா. பின்னர் வீடு திரும்பி பார்த்தபோது, அவரது மூன்று குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், குடும்பப் பிரச்னை காரணமாக தயிர் சாதத்தில் குழந்தைகளின் தாய் விஷம் கலந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.