ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.20,000-க்கான பரிசுத் தொகையை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
பெண் குழந்தைகளை கொண்டாடும் பொருட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோா் தங்களது மகள்களுடன் செல்ஃபி புகைப்படத்துடன் ஒரு சிறந்த வாசகத்தை வலைதளத்திலும், மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு மொத்தம் 60 போ் அனுப்பி வைத்தனா்.
அதில் சிறந்த புகைப்படம் மற்றும் வாசகங்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 4 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகையை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், மாவட்ட சமூக நல அலுவலா் சாந்தி கலந்து கொண்டனா்.