துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வாகனத்தில் விநாயகா் உற்வத்துடன் தொடங்கியது தொடா்ந்து கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனையும் காமதேனு வாகனம், அன்னவாகம், பூதவாகனம், ரிஷப வாகனம், நாக வாகனம், யானை, குதிரை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலாவும், 7-ஆம் தேதி தேரோட்டமும்,10-ஆம்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.