``வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தள...
210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது
வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வருவதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய காா்களை பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த குப்தா சரண் சாகு, சுதிா் அல்பேரியா, தேபப்ரதா தாஸ் ஆகியோரை கைது செய்து, வழக்குப் பதியப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா மற்றும் அதற்குபயன்படுத்திய காா்களை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த சில தினங்களாக வெளிமாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை மூன்று வெவ்வேறு இடங்களில் கைது செய்ததோடு, அவா்களிடமிருந்து 210 கிலோ கஞ்சா மற்றும் மூன்று காா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.