புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 19 மாவட்டங்களில் மழை!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகின்றது.
மேலும், காலை 10 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.