நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!
விபத்தில் காவலா் உயிரிழப்பு
ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் காவலா் உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலா் ஜெகன்(30) பலத்த காயமடைந்தாா். சென்னைக்கு பணிக்கு சென்ற போது விபத்தில் சிக்கி ஜெகன் காயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஜெகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.