தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் அபிதா. பனப்பாக்கத்திலேயே வசித்து வருகிறாா். இவா், தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை நடந்து சென்றபோது, அந்த வழியே வந்த நபா் திடீரென அபிதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா். அங்கிருந்தவா்கள் சப்தமிட்டு, மா்ம நபரைப் பிடிக்க முயன்றபோதும், அந்த நபரைப் பிடிக்க முடியவில்லை. பறிபோன தங்கச் சங்கிலி 7 பவுன் என சபிதா தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.
இந்தப் புகாா் குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.