`இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா தடை' - சவூதி அரேபியா அறிவிப்பு...
காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும், கையெறி குண்டுகளை கையாளுதல் குறித்தும் விவரிக்கப்பட்டது
ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா பயிற்சியை ஆய்வு செய்தாா். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ராமச்சந்திரன், ரமேஷ் ராஜ், வெங்கட கிருஷ்ணன்,சிவராமஜெயன் (மாவட்ட ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.