2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
`வெயில் படத்துல நான் அப்படி பண்ணிருக்கக்கூடாது' - மேடையில் மன்னிப்புக் கேட்ட இயக்குநர் வசந்தபாலன்
வானம் கலைத் திருவிழாவில் வசந்தபாலன் சினிமா குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். "வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாகச் சித்தரித்து இருப்பேன். அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

ரஞ்சித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தலித் பற்றியப் பார்வை, ஜாதி பற்றியப் பார்வை, அதிகாரம் பற்றியப் பார்வை தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது.
உண்மையிலேயே நாகராஜ் மஞ்சுளே, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் ஆகியோர் வந்தப்பிறகு மொத்தப் பார்வையும் மாறி இருக்கிறது.
நாம் சித்தரிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு சிறுபான்மையினராக, தலித்தாக இருந்துவிடக்கூடாது என்ற கூடுதல் கவனம் இருக்க வேண்டும். இரு பாலினத்தவரை, மூன்றாம் பாலினத்தவரை எப்படி நடத்த வேண்டும் என்கிற ஒரு விஷயத்தைத் தனது படங்கள் வாயிலாக மிகக்கூர்மையாக ரஞ்சித் தன்னுடைய படங்களில் எடுத்துரைத்திருக்கிறார்.

மிக முக்கியமான மாற்றம் தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கிறது. கூகை என்ற நூலகத்தை திறந்து வைத்திருக்கிறார். இசைக்கச்சேரி, திரைப்பட விழா போன்றவற்றை நடத்துகிறார். பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலை மிகக்கவனமாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது" என்று வசந்தபாலன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...