செய்திகள் :

க.மு. க.பி விமர்சனம்: வாழ்வின் இரண்டு கட்டங்கள்; சோதனை முயற்சியா, சோதிக்கும் முயற்சியா?

post image

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என முயற்சி செய்யும் அன்பு (விக்னேஷ் ரவி),

அதற்கு உதவியாக வேலைக்குச் சென்றுகொண்டே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் மனைவி அனு (சரண்யா ரவிச்சந்திரன்) -

இவர்கள் இருவர் வாழ்வின் கல்யாணத்துக்கு முன், பின் என இரு காலகட்டங்களைச் சொல்ல முயல்வதே ‘க.மு.க.பி’ படத்தின் கதை.

இதில் நாயகன் தயாரிப்பாளரிடம் கதை சொல்லச் செல்கிறார்; அங்கே அவர் கதை சொல்லும் கதை ‘கதைக்குள் கதை, குடைக்குள் மழை’ என இரண்டு புனைவுகளாக விரிகிறது.

இது நிஜத்தையும் கற்பனையும் பிரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலாக்கி நம்மை பாடாய்படுத்துவது தனிக்கதை.

உரையாடல் வழியாக நகர்கிற கதைக்களத்துக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய நடிப்பைச் சுத்தமாகக் கொடுக்காமல் ஏமாற்றமளிக்கிறார் நாயகன் விக்னேஷ்.

சரண்யாவின் பாத்திரமும் பெண்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதில் பாதியில் நிற்கிறது. இதில் டப்பிங்கில் மூச்சு விடும் சத்தத்தைக்கூட நிசப்தமே இல்லாமல் கொடுத்திருக்கிறார் சரண்யா.

கதைக்குள் கதையில் டி.எஸ்.கே கோபப்படுவதாக வருகிற இடத்தில் பாஸ் ஆனாலும், ரொமான்ஸ் மீட்டரில் ஒரு புள்ளி கூட நகராமல் அங்கேயே நிற்கிறது அவரது நடிப்பு.

அவருக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியதர்ஷினிக்கும் இது பொருந்தும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அத்தனைத் தடுமாற்றம்!

தர்ஷன் ரவிக்குமாரின் பின்னணி இசை காட்சிகளை உயர்த்துவதற்குப் பதிலாக, சலிப்பைத் தருகிறது. பாடல்களும் பெரிதாக மனதில் நிற்கவில்லை.

ஜி.எம்.சுந்தரின் ஒளிப்பதிவும், படத்தின் மொத்தத் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை.

சிவராஜ் பரமேஸ்வரனின் படத்தொகுப்பு, மிக மிகக் குழப்பத்துடன் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்துக் காட்டத் தவறுகிறது. இருப்பினும், படத்தின் திரைநேரத்தைக் குறைத்ததற்கு நன்றி!

ஒலி வடிவமைப்பு, டப்பிங் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் பின்னணி ஒலி, உரையாடல்கள் ஒத்திசைவின்றி ஒலிக்கின்றன.

அதை மிகவும் இயல்பாக இருக்க வேண்டிய திரைமொழியில் பேசாமல், மோசமான ஸ்டேஜிங், செயற்கையான காட்சியமைப்புகளால் கோத்திருக்கிறார்.

இதனால் ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வு வராமல், ஒரு சாதாரண வீடியோவைப் பார்க்கிறோம் என்ற உணர்வே மிஞ்சுகிறது. காதல் காட்சிகளும், அதற்காக வைக்கப்பட்ட வசனங்களும் படு செயற்கைத்தனமாக உள்ளன.

அதேபோல, கதையின் மையமான கல்யாண வாழ்வில் இருக்கும் சிக்கல்களை மூச்சுவிடாமல் பேசும் வசனங்களாக மட்டும் காட்டிவிட்டு, திரைக்கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் வருகிற நபர்களுக்கும் காட்சிகளை வைத்திருப்பது முரண்!

இதனாலேயே பலவீனமாகப் பின்னப்பட்ட திரைக்கதையில், காட்சிகளுக்கு இடையே தொடர்பு இல்லாமல், கதைக்குச் சம்பந்தமில்லாத பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. இது கதையின் ஓட்டத்தை முற்றிலும் சிதைத்துவிடுகின்றன.

நடிப்பு, திரைக்கதை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் பலவீனமாக உள்ள இந்த ‘க.மு.க.பி’, ஏமாற்றத்தையே கொடுக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் இணைந்து கரோக்கே பாடி வைப் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில், நடிகர் அஜித்தின் வாலி படத்தில் வரும் ஓ சோனா பாடலை நண்பருடன... மேலும் பார்க்க

`பா.ரஞ்சித் சார் போலவே புச்சிபாபு சனாவும்..' - வியக்கும் ஆடை வடிமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்

புச்சிபாபு சனாவின் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் முதல் ஷாட் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் ராம்சரணின் தோற்றமும... மேலும் பார்க்க

`வெயில் படத்துல நான் அப்படி பண்ணிருக்கக்கூடாது' - மேடையில் மன்னிப்புக் கேட்ட இயக்குநர் வசந்தபாலன்

வானம் கலைத் திருவிழாவில் வசந்தபாலன் சினிமா குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். "வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாகச் சித்தரித்து இருப்பேன். அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்க... மேலும் பார்க்க

வானம் கலைத் திருவிழா: 'சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம்'- பா.ரஞ்சித் பேசியது என்ன?

2025ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தொடங்கியது. இந்தக் கலைத்திருவிழாவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பி.கே.ரோசி திரைப... மேலும் பார்க்க

Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ - மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்பஸ்தன் நடிகை சான்வே

ஜெய்பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் நடிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குடும்பஸ்தன்'. இந்த ஆண்டு வெளியான சிறந்த குடும்பப் படம் என... மேலும் பார்க்க