2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
வானம் கலைத் திருவிழா: 'சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம்'- பா.ரஞ்சித் பேசியது என்ன?
2025ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தொடங்கியது.
இந்தக் கலைத்திருவிழாவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பி.கே.ரோசி திரைப்படவிழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த திரைப்பட விழாவில் உலகளவில் விருதுகள் பெற்ற திரைப்படங்கள், தடை செய்யப்பட்ட ஒரு சில உலகத் திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்படும்.

அந்தவகையில் நேற்று( ஏப்ரல் 6) 'சந்தோஷ்' என்ற திரைப்படம் திரையிடப்பட இருந்தது. ஆனால் அந்தப் படத்தைத் திரையிட அனுமதி கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசியிருக்கும் பா.ரஞ்சித், "இந்தத் திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என்று போலீஸ் தரப்பில் இருந்து நோட்டிஸ் ஒட்டிச்சென்றிருக்கிறார்கள்.
படம் திரையிடக்கூடாது என்று பிரச்னை செய்திருக்கிறார்கள். பிரசாத் லேப்பின் உரிமத்தை நீக்கி விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.
இங்கு 'சந்தோஷ்' படத்தைத் திரையிட முடியவில்லை என்றால் என்ன? நாங்கள் வெளியில் திரையிடுவோம். அவர்கள் பிரச்னை செய்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு சக்தி நம்மிடம் இருக்கிறது.

கைது செய்தாலும் பரவாயில்லை. கொஞ்சநாள் சிறையில் இருப்போம். 10 நாட்கள் சிறையில் இருந்தாலும் புத்தகம் படிக்கலாம். அதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். கைதாவதற்குத் தயாராக இருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
'சந்தோஷ்' திரைப்படத்தை பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கி இருந்தார். இத்திரைப்படம் ஆஸ்கர் உட்பட உலகின் பல்வேறு விருது விழாவிற்கு சென்று கவனம் ஈர்த்தது.
இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை என்பது உள்ளிட்ட பிரச்னைகள் இத்திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடத் தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...