கோவை: கல்லூரி மாணவியுடன் பழகிய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் - 2 பேர் கைது
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் சொந்த அண்ணனே அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சஞ்சய். இவர் தன் வகுப்பில் உள்ள வேறு மத பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது அந்த மாணவியின் பகுதியில் இருந்த சில இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. முகமது பஷீத் மற்றும் முகமது சஜீத் ஆகிய இளைஞர்கள் சஞ்சயை உக்கடம் அருகே ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பஷீத்தின் நண்பர்கள் 8 பேரும் இருந்துள்ளனர். “எதற்காக அந்த பெண்ணுடன் பேசுகிறாய்.
இனி நீ அவளுடன் பேசக் கூடாது.” என்று அவரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து சஞ்சயை பீர் பாட்டில் மற்றும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சஞ்சயின் தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
பிறகு அவர்கள் சஞ்சயை கல்லூரியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சஞ்சய் தன் அப்பாவிடம் முறையிட்டுள்ளார். அவர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து

முகமது பஷீத் மற்றும் முகமது சஜீத் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவருடன் பழகுவது பிடிக்காத காரணத்தால் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
