கர்நாடகா: மனைவியைக் கொன்றதாகச் கணவனுக்குச் சிறை; உயிரோடு உலா வந்த மனைவி; என்ன நடந்தது?
இறந்த மனைவிக்காக இறுதிச்சடங்கு செய்த, துக்கம் அனுசரித்த கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், இறந்ததாக நம்பப்பட்ட பெண் உயிரோடு நடமாடிய ஆதிர்ச்சி செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காணாமல் போன மனைவி
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், பசவனஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் மல்லிகா என்பவருக்கும் திருமணம் முடிந்து 2019 வரை அமைதியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
அதன்பிறகு சுரேஷுக்கு மல்லிகா திருமணம் மீறிய உறவில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அப்போதே, சுரேஷ் மல்லிகாவை அழைத்து, குழந்தைகளுக்காக உடன் வாழும்படி கேட்டிருக்கிறார். 2021-ல் மல்லிகா திடீரென காணாமல் போயிருக்கிறார்.

இறுதிச்சடங்கு
சுரேஷ் பல இடங்களில் தேடி, இறுதியில் காவல்நிலையத்திலும், மனைவியைக் கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்திருக்கிறார். அது தொடர்பான விசாரணையைக் காவல்துறை தொடங்கியது.
2022-ம் ஆண்டு பெரியபட்னா தாலுகாவின் பெட்டடபுரா அருகே மனித பாகங்கள் மீட்கப்பட்டன. அது சுரேஷின் மனைவி மல்லிகாவுடையது எனக் காவல்துறை கருதியது.
சுரேஷும் அந்த எலும்புக்கூட்டைப் பார்த்து, அது அவரது மனைவி எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இறுதிச்சடங்குகள் நடத்தினார்.
இந்த நிலையில், இந்தக் கொலையைச் சுரேஷ்தான் செய்திருப்பார் எனக் காவல்துறை சந்தேகித்தது. அதனால், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
சுமார் 2 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் டிஎன்ஏ சோதனையில், மல்லிகாவின் குடும்பத்துடன் எந்த மரபணு பொருத்தமும் இல்லை என்பது தெரியவந்த பிறகு, சுரேஷ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
உயிரோடு இருந்த பெண்
இந்த சூழலில்தான், கடந்த 1-ம் தேதி இறந்ததாகக் கருதப்பட்ட மல்லிகா வேறு ஒருவருடன் ஹோட்டலுக்குள் செல்வதைச் சுரேஷின் நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அப்போதே புகைப்படம் எடுத்து, காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றனர். உடனே காவல்துறை மல்லிகாவைக் காவலில் எடுத்து மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs