புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையில் நிறைவேற்றம்
12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு, நேற்று மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
'இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா' என்ற குரல்கள் எழுந்தன.
இருந்தும், வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது என்றும், இந்த மசோதா மீது 8 மணி நேர விவாதம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், நேற்றைய விவாதம் 12 மணிநேரத்திற்கு தொடர்ந்தது. எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகளையும், எதிர்ப்புகளையும் முன் வைத்தனர்.

விவாதத்தின் இறுதியில் மசோதாவின் மீது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 288 - 232 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் அடிப்படையில், வக்ஃப் வாரிய நிலங்களை நடைமுறைப்படுத்த இரண்டு முஸ்லீம் அல்லாதவர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.
இந்த மசோதா மதத்தை பற்றியது அல்ல என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு விளக்கம் தந்து வருகிறது.