புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
Career: டாக்டருக்கு 'வெள்ளை' கோட்; வக்கீலுக்கு 'கறுப்பு' கோட்! - I.T-க்கு என்ன கலர் தெரியுமா?
டாக்டருக்கு வெள்ளை கோட், வக்கீலுக்கு கறுப்பு கோட் என்பதுபோல ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஆடை மற்றும் ஆடை நிற கோடு (Code) உள்ளது.
'அது என்ன...' என்பதை விளக்குகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.
நிதி, கன்சல்டிங், ஐ.டி, வங்கி, சட்டம், ஹெச்.ஆர், நிர்வாகம் போன்ற கார்ப்பரேட் துறைகளுக்கு ஏற்ற நிறங்கள் நேவி, சாம்பல் நிறம், வெள்ளை, பீஜ் (Beige) அல்லது பாஸ்டல்ஸ் ஆகும்.

பெண்கள்:
பெண்கள் கிரிஸ்ப்பான சட்டை, ஸ்ட்ரைட் கட் டவுசர் அணியலாம். இது ஃபுல் ஸ்லீவாக இருந்தால் சிறந்தது. சீனியர் லெவலில் இருப்பவர்கள் கட்டாயம் பிளேசர் அணிய வேண்டும்.
புடவை அணிவதாக இருந்தால் பாஸ்டல் அல்லது சாலிட் நிற காட்டன், சில்க், லினன் புடவைகள் நல்லது.
ஆபரணங்களாக ஆடம்பரமாக இல்லாமல் கட்டாயம் சிம்பிளாக இருக்க வேண்டும்.
போனி டைல் ஹேர் ஸ்டைல் சிறந்தது.
ஆண்கள்
ஆண்கள் அடர் நிற டவுசர், வெள்ளை, லைட் ப்ளூ, பீஜ் போன்ற லைட் நிற ஃபுல் ஸ்லீவ் சட்டை சூப்பரான காம்போ.
தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு பிளேசர் கட்டாயம். டை வேண்டுமானால் அணியலாம் அல்லது தவிர்த்துவிடலாம். பேங்கிங், சட்டம் போன்ற துறைகளுக்கு டை அணிந்தால் நன்றாக இருக்கும்.
லெதர் அல்லது கிளாசி வாட்ச் ஒரு ரிச் லுக்கை தரும்.
பாலிஷ்டு ஷூ உங்கள் தோற்றத்தை முழுமைப்படுத்திவிடும்".